×

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க மே 27 கடைசி நாள்

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2329 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க மே 27ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2329 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி நகல் பரிசோதகர் 60 இடங்கள், நகல் வாசிப்பாளர்-11, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்-100, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்- 242, கட்டளை எழுத்தர்- 1, ஒளிப்பட நகல் எடுப்பவர்-53, ஓட்டுநர்- 27, நகல் பிரிவு உதவியாளர் 16, அலுவலக உதவியாளர் -638, தூய்மை பணியாளர் -202, தோட்டப் பணியாளர்- 12, காவலர், இரவு காவலர்- 459, இரவு காவலர் மற்றும் மசால்ஜி-85, காவலர் மற்றும் மசால்ஜி- 18, தூய்மை பணியாளர் மற்றும் மசால்ஜி -1, வாட்டர்மென், வாட்டர்வுமன்-2, மசால்ஜி – 402 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

சென்னையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 10 டிரைவர் பணியிடங்களும், நகல்பிரிவு உதவியாளர் 115 இடங்கள் என மொத்தம் 191 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டோகாப்பியர் மற்றும் டிரைவர் பதவிகளுக்கு முன் அனுபவம் தேவை. 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வானது 2 பிரிவுகளாக நடத்தப்படும். தேர்வு இரண்டரை மணி நேரம் நடைபெறும். ரூ.550 தேர்வுக் கட்டணமாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் பொருத்தமான மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் (பொறுப்பு) ஜெ.செல்வநாதன் தெரிவித்துள்ளார்.

The post தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க மே 27 கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai High Court ,Madras High Court ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...